BANvNED [File Image]
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ( அக்டோபர் 28) ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நெதர்லாந் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டனின் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நெதர்லாந்திடம் வங்கதேசம் 87 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது.
வங்கதேசம் அணி தோல்வியை சந்தித்ததால் மிகவும் ஆத்திரம் அடைந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய செருப்பை கழட்டி தன்னை தானே அடித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” வங்கதேசம் அணி தோல்வி அடைந்தவுடன் மிகவும் கோபத்திலும் வேதனையிலும் ஒரு நபர் கேமராவுக்கு முன்பு நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்.
அப்போது பெரிய அணிகளிடம் தோல்வி அடைந்தால் கூட கவலை இல்லை. அதைப்பற்றி நாங்கள் பெரிதாக வருத்தப்படமாட்டோம் ஆனால், நெதர்லாந்திடம் எப்படி தோற்றது? என்னால் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை அந்த அளவிற்கு கோபமாக வருகிறது என கூறிவிட்டு தான் கால்களில் அனிருந்திருந்த செருப்பை கழட்டி தன்னை தானே அடித்துக்கொண்டார். கோபத்துடன் பேசிக்கொண்டிருந்த அந்த நபர் திடீரென செருப்பை கலட்டிக்கொண்டு தன்னை தானே அடித்த காரணத்தால் இதனை பார்த்த அவருடன் வந்தவர்கள் சிரிக்கவும் செய்தார்கள்.
மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந் அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தனர். அடுத்ததாக 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 42 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந் அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் பங்களாதேஷ் அணியும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் இந்த மோசமான ஆட்டத்தால், ரசிகர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இதன் காரணமாக தான் விரக்தியில் அந்த ரசிகர் தன்னை தானே ஆதங்கத்தில் செருப்பை கழட்டி அடித்துக்கொண்டார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…