WTC Final : ஆரம்பத்திலேயே ஆஸியை அதிர வைக்கும் தென்னாபிரிக்கா! வெற்றிபெற்றால் இவ்வளவு கோடியா?

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தடுமாறி வருகிறது.

WTCFinal Australia vs South Africa

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 11) முதல் தொடங்கி வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. சரியாக இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

விளையாடும் வீரர்கள் 

ஆஸ்திரேலியா : ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேட்ச்), டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன் (வாரம்), வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

தென்னாபிரிக்கா : உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (wk), பாட் கம்மின்ஸ் (c), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸியை அதிர வைக்கும் வகையில் தென்னாபிரிக்கா பந்துவீச்சு இருந்தது என்று சொல்லலாம். அதே சமயம், தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பவுமாவின் கேப்டன் சியும் அருமையாக இருந்தது. ஏனென்றால், ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜாவை ரபாடாவை வைத்து சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க செய்தார். அதனை தொடர்ந்து மீண்டும் ரபாடாவை வைத்து கேமரன் கிரீன் (4) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதில் அவர் எந்த அளவுக்கு சிறந்த ஒரு கேப்டனாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது. ஏற்கனவே, பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை அவர் தலைமையில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியைச் சந்திக்கவே இல்லை. இந்தப் போட்டிகளில் 8 வெற்றிகளையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. எனவே, இந்த போட்டியிலும் அவர் வழக்கமாக எப்படி சிறப்பாக கேப்டன்சி செய்வாரோ அதே தான் செய்து வருகிறார். 2 விக்கெட் இழந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் ஆஸி இறுதிப்போட்டியில் தடுமாறி விளையாடி கொண்டு இருக்கிறது.

பரிசுத்தொகை 

மேலும், 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டாலர் (USD) பரிசுத் தொகை வழங்கப்படும், இது இந்திய ரூபாயில் தோராயமாக 30.79 கோடி ரூபாய் ஆகும். அதே சமயம், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 1.75 மில்லியன் அமெரிக்க டாலர் (USD) பரிசுத் தொகை வழங்கப்படும், இது இந்திய மதிப்பின் படி, 14.96 கோடி ரூபாய் ஆகும். எனவே, எந்த அணி வெற்றிபெறும் எந்த அணி தோல்வி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்