முக்கியச் செய்திகள்

தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி…போராடி தோற்ற பாகிஸ்தான் ..!

Published by
murugan

ஐசிசி ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் இன்று 26-ஆவது லீக் போட்டியில்  பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இந்த போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் தடுமாறி விளையாடினர். பின்னர் அப்துல்லா ஷபீக் 9 , இமாம்-உல்-ஹக் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து  பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் கூட்டணி சற்று அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த ரிஸ்வான் 31 ரன் எடுத்து  விக்கெட்டை இழந்தார். மறுபுறம் விளையாடிய பாபர் அசாம் தனது அரை சத்தை பூர்த்தி செய்த உடனே பெவிலியன் திரும்பினார்.

இருந்தாலும், பின்னர் வந்த சவுத் ஷகீல் அரைசதம் அடித்து 52 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  இறுதியாக பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் ஷம்சி 4, மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2  விக்கெட்டுகளை வீழ்த்தினர். 271 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டெம்பா பாவுமா, குயின்டன் டி காக்  களமிறங்கினர். முந்தைய போட்டியில் சதம் விளாசிய குயின்டன் டி காக் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த டெம்பா பாவுமா 28 ரன்னில் வெளியேறினார். பின்னர் களம் கண்ட ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாட தொடங்கினர். ஒருபுறம் மார்க்ராம்  விளையாட மறுபுறம்  தென்னாபிரிக்கா அணி  விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. அதன்படி  ஹென்ரிச் கிளாசென் 12, டேவிட் மில்லர் 29,  மார்கோ ஜான்சன் 20, ஜெரால்ட் கோட்ஸி 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப சிறப்பாக விளையாடி வந்த ஐடன் மார்க்ராம்  சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக தென்னாபிரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து  271 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டையும்,  ஹரிஸ் ரவூப், முஹம்மது வசீம், உசாமா மிர் 2 விக்கெட்டை பறித்தனர்.

 

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

11 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

14 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

15 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

17 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

17 hours ago