ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளனர்.
புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 8வது இடத்திலும், பஞ்சாப் 7வது இடத்திலும் உள்ளது. இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. எனவே, இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 22ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான 33 வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதுபோன்று பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான 32வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்றைய தினத்தின் அனல் பறக்கும் இரண்டாவது போட்டியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.
(Playing XI) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா (wk), கேன் வில்லியம்சன் (c), மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளன.
(Playing XI) – பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:
கேஎல் ராகுல் (w/c), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…