இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 15-ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மற்றும் கேஎஸ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனிடையே, ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில உள்ளது. இதுபோன்று ஒரே ஓர் போட்டி மட்டுமே விளையாடியுள்ள ஐதராபாத் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. எனவே, ஐதராபாத் வெற்றி பாதைக்கு திரும்புமா அல்லது மீண்டும் லக்னோ அணி வெற்றி வாகை சூடுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…