RCB vs SRH:இன்று ஐபிஎல்லின் 52 வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
2021 ஐபிஎல் சீசனின் 52 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 19 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது மற்றும் 12 போட்டிகளில் வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. ஆர்சிபிக்கு எதிரான வெற்றி அல்லது தோல்வி அவர்களின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கோ அல்லது போட்டியில் அவர்கள் நிலைப்பாட்டிற்கோ எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் வென்றாலும், அவர்கள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிப்பார்கள்.
மறுபுறம்,ஆர்சிபி 12 ஆட்டங்களில் எட்டு வெற்றிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால்,ஆர்சிபி தனது பிளேஆஃப்ஸ் இடத்தை அடைந்துவிட்டது.
சாத்தியமான அணிகள்:
RCB: விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், AB டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன்/ டிம் டேவிட், ஜார்ஜ் கார்டன்/ கைல் ஜேமிசன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.
SRH: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (wk), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார்/ சந்தீப் சர்மா, உம்ரான் மாலிக் மற்றும் சித்தார்த் கவுல்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…