#IPL2020: போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர்..!

ஐபிஎல் தொடரில் 35-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். பின்னர், களம் கண்ட ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். இதனால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.