T20 World Cup 2021:பேட்டிங்கில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கு!

Published by
Edison

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.அதன்படி,அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய்,முகமது ஷாஜாத் ஆகியோர் வந்த வேகத்திலேயே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதனையடுத்து,குர்பாஸ்,குல்பாடின் ஆகியோர் இறங்கினர்.ஆனால்,6 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபுள்யு ஆகி குர்பாஸ் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து,குல்பாடினும் இஷ் சோதியின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர்,நஜிபுல்லா மற்றும் கேப்டன் நபி ஆகியோர் களம் கண்டனர்.அதிரடியாக விளையாடி நஜிபுல்லா அணியின் ரன்களை உயர்த்தினார்.ஆனால்,கேப்டன் நபி 14 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தொடர்ந்து,சிறப்பாக விளையாடி வந்த நஜிபுல்லா 73 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.அவர் அடித்த ரன்களே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.

இதனையடுத்து,களமிறங்கிய கரீம் ஜனத்,ரஷித் கானும் ஒற்றைப்படை ரன்களில் விக்கெட்டை இழக்க,20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

30 minutes ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

1 hour ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

2 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

3 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

6 hours ago