அபார வெற்றி..! அயர்லாந்தை எளிதில் வீழ்த்திய இந்தியா.!

Published by
மணிகண்டன்

கிரிக்கெட்: டி20 உலககோப்பை தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்திய கிரிக்கெட் அணி தங்கள் முதல் போட்டியை நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி 16 ஓவர் முடிவில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

ஆண்ட்ரூ பால்பிர்னி 5 ரன்களும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும், லோர்கன் டக்கர் 10 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் , கரேத் டெலானி 26 ரன்களும், ஜோசுவா லிட்டில் 14 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மீதம் உள்ள வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி 16 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்டியா 3  விக்கெட்களும், பும்ரா மற்றும் ஹர்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

20 ஓவரில் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இதில் விராட் கோலி 2.4 ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து, ரிஷப் பண்ட் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை தொடங்கினார். தொடக்க வீரர் ரோஹித் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 52* ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வெறும் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுபுறம் இருந்த ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசிவரை களத்தில் ரிஷப் பண்ட் 36* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  வருகின்ற 9-ம் தேதி இந்தியா அணி பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

5 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

6 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

7 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

8 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

8 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

11 hours ago