தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் தோனி தான். கேப்டனாக அவர் செய்த சாதனைகள் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாதது. இந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பல ரசிகர்கள் வருந்தினர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வருடம் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்தநிலையில் இதுவரை சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவரப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் அண்மையில் சென்னை அணி நிர்வாகம் 2021 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், “சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. அனைத்து விதமான மரியாதை மற்றும் சுதந்திரத்தை தோனி பெறுகிறார்.
இவர்களுக்கு இடையே நல்ல நட்பு மட்டும் நல்ல உறவுகள் உள்ளது. அடுத்த வருடம் தோனிதான் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது ஆச்சரியம் அளிப்பது ஒன்றும் இல்லை. தோனியால் விளையாட முடியும் வரை விளையாடுவார் மும்பை அணிக்கு பிறகு ஒரு நல்ல அணியை அவர் உருவாக்கியுள்ளார்.
அடுத்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியாக இருப்பார் என்று ஐபிஎல் நிறுவனம் அறிவித்தது இதனால் தோனியும் விசுவாசமாக இருக்கிறார். இந்த நிலையில் தோனி அவருடைய ஆன்மா, இதயம் தூக்கமில்லா இரவுகள் அனைத்தையும் கொடுக்கிறார். தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…