CSKvsRCB : தொடங்கியது முதல் போட்டி ..! பேட்டிங் களமிறங்கும் பெங்களூரு ..!

Published by
அகில் R

CSKvsRCB : ஐபிஎல் 2024, 17-வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால். இந்த முடிவை டாஸ் வென்றவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன ஃபாப் டுப்ளஸி எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் 20 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கிறது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி இருந்து வருகிறது.

Read More :- IPL 2024 : தொடங்கியது ஐபிஎல் திருவிழா ..! கொண்டாட்டத்தில் மூழ்கிய சேப்பாக்கம் ..!

சென்னை அணியின் வீரரான சிவம் துபே, ஷர்துள் தாகூர் ப்ளெயிங் 11-ல் இடம்பெறவில்லை. ஒரு வேலை இம்பாக்ட் பிளேயாராக விளையாடுவர் என்பது தெரிகிறது. அதே போல சென்னை அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளரான  சமீர் ரிஸ்வி இடம் பெற்றுள்ளார்.

சென்னை அணி வீரர்கள் : 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே.

பெங்களூரு அணி வீரர்கள் :

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், கர்ன் ஷர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்.

Recent Posts

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

24 minutes ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

47 minutes ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

2 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

3 hours ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

4 hours ago