இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி.! வெற்றி வாகை சூடுமா இந்தியா…

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.

ind eng odi

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 6) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (பிப்ரவரி 6-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், டி20 தொடரை வென்ற உத்வேகத்தில் உள்ள இந்திய அணி, இப்பொது ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்ய முனைப்புடன் செயல்படும்.

அதேசமயம், ஒரு நாள் தொடரை வென்று கவுரவத்தை நிலைநிறுத்தும் வேகத்துடன் இங்கிலாந்து அணி வீரர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்திய அணியில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடப் போவதால், ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்…

இந்திய அணி:

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பைர்டன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத் ஆகியோர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்