INDvZIM , 4th T20 [file image]
ZIMvIND : நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஜிம்பாவே அணி பேட்டிங் களம் இறங்கியது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஜிம்பாவே அணி நல்ல ஒரு தொடக்கத்தையே இந்திய அணிக்கு எதிராக பதிவு செய்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் இருவரும் தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரிகள் விளாசினார்கள்.
சீரான இடைவெளியில் இருவரும் அவர்களது விக்கெட்டைபறிகொடுக்க ஜிம்பாவே அணி கேப்டனான ராசா பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். அவரது நிதான ஆட்டத்தால் ஜிம்பாவே அணி ஒரு டீசன்டான ஸ்கோரை பதிவு செய்தது. ஜிம்பாவே அணியில் அதிகபட்சமாக ராசா 46 ரன்கள் எடுத்திருந்தார்.
அதனால், 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்திய அணி. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் அணியில் இல்லாத ஜெய்ஸ்வால், கடந்த போட்டியில் விளையாடினார். அதன்படி இன்றைய போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், கில்லுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
ஜிம்பாவே அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் ஜெய்ஸ்வால் நாலாப்பக்கமும் போலந்து கட்டினார். இருவரின் விக்கெட்டை எடுக்கவும் ஜிம்பாவே அணி தடுமாறியது. இதனால், 1 விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 53 பந்துக்கு 93* ரன்களும், கில் 39 பந்துக்கு 58* ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தற்போது கைப்பற்றி உள்ளது, மேலும் நாளை மாலை 4.30 மணிக்கு கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியானது நடைபெற உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…