IPL 2024 : தொடங்கியது ஐபிஎல் திருவிழா ..! கொண்டாட்டத்தில் மூழ்கிய சேப்பாக்கம் ..!

Published by
அகில் R

IPL 2024 : உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  50-வது முறையாக கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து, 2023 இறுதி போட்டி முடிவடைந்ததில் இருந்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது.

Read More :- ‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..!

தற்போது அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் ஐபிஎல் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டாடி தீர்த்தனர். ஐபிஎல் தொடர் ஆரம்பம் முதலே, முதல் போட்டிக்கு முன்பு ஐபிஎல் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக அமையும் வகையில் திருவிழா போல கலைநிகழ்ச்சியை நடத்தி வருவது ஐபிஎல் நிர்வாகத்தின் வழக்கமாகும்.

அதே போல இந்த ஐபிஎல்லிலும் முதல் போட்டிக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த முறை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை ஹிந்தி நடிகர்களான அக்ஷய் குமாரும், டைகர் ஷெராப்பும் நடனமாடி தொடங்கி வைத்தனர். அவர்களை தொடர்ந்து இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவரது இசைக்குழுவோடு ‘வந்தே மாதரம்’ பாடலை பாடி இசை நிகழ்ச்சியை தொடஙகினார். ஹிந்தி பாடலை பாடிய அவர் திடீர் என்று அவர் இசை அமைத்த ‘சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘பல்லே லக்கா’ படலை பாடினார்.

Read More :- எங்களுக்கே தெரியாதுங்க..’எல்லாம் தோனி முடிவு தான்’ ! சிஸ்கே CEO காசி விஸ்வநாதன் பேச்சு!

அவருடன் ரசிகர்களும் பாட சேப்பாக்கம் மைதானமே இசை கச்சேரியில் மூழ்கியது போல காட்சியளித்தது. இறுதியாக ‘ஜெய் ஹோ’ பாடலை பாடி ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதுவரை ஐபிஎல் தொடருக்கு கிடைக்காத ரசிகர்களின் வரவேற்பு இந்த 17-வது சீசன் ஐபிஎல் தொடருக்கு மிக பெரும் அளவிற்கு கிடைத்துள்ளது.

Recent Posts

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

4 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

22 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

1 hour ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago