இன்று 3-வது டி20 போட்டி:இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?..!

Default Image

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட  டி20 தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில்,இரு அணிகளுக்கு இடையே  இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து,வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில்  17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186  ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.இதனால்,இலங்கை அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில்  நடைபெறவுள்ளது.இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

அணிகள்:

இந்திய அணி(Squad): ரோஹித் சர்மா (கேப்டன்),இஷான் கிஷன் (வி.கீப்பர்),ஷ்ரேயாஸ் ஐயர்,சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா,வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா,ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், மயங்க் அகர்வால், குல்தீப் யாதவ், அவேஷ் கான் , முகமது சிராஜ், ரவி பிஷ்னோய்.

இலங்கை அணி(Squad): பதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்கா, கமில் மிஷார, தினேஷ் சந்திமால்(வி.கீப்பர்), தசுன் ஷனக(கேப்டன்), சமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார, தனஞ்சய, தனஞ்சய, தனஞ்சய, டி எஸ்.ஜெஃப்ரி வான்டர்சே, மஹீஷ் தீக்ஷனா,ஆஷியன் டேனியல், ஜனித் லியனகே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்