தெறிக்கவிட்ட இந்தியா…41 ரன்களில் ஜப்பனை சுருட்டி..மடித்தது.!உலகக்கோப்பை விறுவிறு

Default Image
  • u19 உலகக்கோப்பை தொடரில் இந்திய -ஜப்பன் மோதியது
  • ஜப்பனை 41 ரன்னில் சுருட்டி இந்திய அபார வெற்றி

u19 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ,4 முறை ) கோப்பையை வென்ற இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்க்கை  முதலில் தேர்வு செய்தது.

அதன் படி பேடிங்க் செய்ய களமிரங்கிய ஜப்பான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  22.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  41 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்த ரன்னில்  19 ரன்கள் எக்ஸ்டாரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின்  அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். குறிப்பிட்டு சொன்னால் ஜப்பன் அணியின் 5 வீரர்கள் தொடர்ந்து டக் அவுட்டாகி வெளியேறினர்.

Image result for u19 world cup india vs japan

இந்திய அணி சார்பில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மறுபக்கம் கார்த்திக் தியாகி 3 விக்கெட்களை சாய்த்தார், ஆகாஷ் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தி அதிரடி காட்டினார்.

இந்நிலையில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களில் எவ்வித விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. தற்போது இந்திய விளையாடிய உள்ள 2 போட்டிகளிலும் வெற்றியை ரூசித்துள்ளது.மேலும் U19 உலகக் கோப்பை போட்டித்தொடர் வரலாற்றில் 2வது குறைந்தபட்ச (41)ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்