டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே நிலைத்து நிற்கவில்லை பிருத்வி ஷா 2, தவான் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து இறங்கிய ரகானே 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 36 ரன்னில் 3 விக்கெட்டை பறிகொடுத்தது.
முதல் மூன்று விக்கெட்டையும் உனட்கட் பறித்தார். இதைத்தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.
உனட்கட் 4 ஓவர் வீசி முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறித்து 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 148 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…