ஐபிஎல் நேரத்தை தொடங்கிய விராட் கோலி.!

விராட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் RCB அணியினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் போட்டி நெருங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது.
அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடர்பான நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டிலே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், அந்த வகையில் RCB அணியின் கேப்டன் விராட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் RCB அணியினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் போட்டி நெருங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025