பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் -ரவுண்டராக வர்ணிக்கப்படுபவர் அப்துல் ரசாக்.இவர் பாகிஸ்தான் அணியின் இவர் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த 2013 -ஆம் ஆண்டு விளையாடினார். இந்த போட்டிதான் இவரது கடைசி சர்வதேச போட்டி ஆகும்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சில் கலக்கி வரும் இளம் வீரர் ஜஸ்பிரிட் பூம்ரா குறித்து அப்துல் ரசாக் கருத்து தெரிவித்தார்.அதாவது பூம்ரா ஒரு குழந்தை போல உள்ளார்.நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பூம்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.
இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்கள் இடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.இவரது கருத்துக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இவர் கூறிய இந்த கருத்து ஓய்வதற்குள் தற்போது மீண்டும் ஒரு கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது உலகின் தற்போதைய காலகட்டத்தில் தலை சிறந்த வீரராக கருதப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,1992-ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர்கள் உலக தரம் வாய்ந்த வீரர்களாக இருந்தனர்.ஆனால் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அப்படி யாரும் இல்லை.காரணம் டி -20 போட்டிகள் மாற்றிவிட்டது.
ஆனால் விராட் கோலி மட்டும் சச்சினை போல நல்ல மதிப்பெண்களை பெற்றுவருகிறார்.ஆனால் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சச்சின் வேறு ,கோலி வேறு என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…