என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப்பிரையண்ட் மற்றும் அவருடைய மகள் உள்ளிட்ட 9 பேர் கடந்த மாத இறுதியில் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உடல்கருகி உயிரிழந்தனர்.கோப் பிரையண்ட்டி மறைவு விளையாட்டு துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவருடைய மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோா் இரங்கல் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோப் பிரையண்ட் மரணம் குறித்து பேசினார்.
அதில்கோப் பிரையண்டின் மரணம் ஆனது அதிர்ச்சி அளித்தது. காலை நேரத்தில் நான் என்பிஏ கூடைப்பந்து ஆட்டங்களை ரசித்து பார்த்து வளர்ந்தவன். இந்நிலையில் கோப் போன்று ஒருவர் இறக்கும்போது இவற்றை எல்லாத்தையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியுள்ளது. ஒருவரின் திறமையைப் பார்த்து நீங்கள் அதற்கு ஊக்கம் கொள்கிறீர்கள். ஆனால் கடைசியில் நம்முடைய இந்த வாழ்க்கையானது ஒரு நிலையற்றது.சிலசமயத்தில் வாழ்க்கையை மறந்துவிட்டு வேலையில் அதாவது விளையாட்டில் கூடுதல் ஈடுபாடு காட்டுகிறோம்.
எந்த ஷாட்டை எப்படி அடித்து விளையாட வேண்டும், எப்படிப் பந்துவீச வேண்டும் என்று ஆனால் உண்மையான வாழ்க்கையை வாழ நாம் மறந்துவிடுகிறோம். கோப் பிரையண்டின் மரணம் இவை எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் என்னை பார்க்கவைத்துவிட்டது. நீங்கள் வாழும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழவேண்டும், ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமில்லை. வாழ்க்கை தான் நமக்கு முக்கியம் என்று உருக்கமோடு கூறினார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…