வீணான அசலங்கா சதம் .. 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் திரில் வெற்றி..!

Published by
murugan

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணியில் முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் முதல் ஓவரின் கடைசி பந்தில் குசல் பெரேரா 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து குசல் மெண்டிஸ் களமிறக்க பதும் நிஸ்ஸங்க பவர் பிளேவில் சிறப்பாக  விளையாடி நல்லத் தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.

மறுபுறம் விளையாடி வந்த குசல் மெண்டிஸ் ஓரளவு ரன் எடுத்து 19 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த 2 ஓவரில் பதும் நிஸ்ஸங்கவும் அரைசதம் பூர்த்தி செய்யாமல் 41 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா இருவரும் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் பொறுப்பாக விளையாடி வந்த சதீர சமரவிக்ரமா அரைசதத்தைத் தவறவிட்டு 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதற்கிடையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் “டைம் அவுட்” முறையில் வெளியேறினார். இந்த அவுட் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது. அடுத்து களமிறங்கிய தனஞ்சய டி சில்வா 34, மகேஷ் தீக்ஷனா 22 ரன்கள் எடுத்து  பெவிலியன் திரும்பினர். மறுபுறம் விளையாடி வந்த சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி சதமடித்து விளாசினார்.

146 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் .. கடுப்பான ஏஞ்சலோ மேத்யூஸ்..!

அடுத்த சில நிமிடங்களில் சரித் அசலங்கா 105 பந்திற்கு 6 பவுண்டரி, 5 சிக்ஸர் என மொத்தம் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணியில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றஇலக்குடன் பங்களாதேஷ் அணியின் தொடங்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். 3-வது ஓவரில் தன்சித் ஹசன் 9 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் நஜ்மல் உசேன்  களமிறங்க களத்தில் இருந்த லிட்டன் தாஸ் நிதானமாக விளையாடி வந்த போது 23 ரன்னில் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் மறுபுறம் விளையாடி நஜ்மல் உசேன் உடன் ஜோடி சேர்த்தார்.

இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசத்தை பூர்த்தி செய்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக விளையாடி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 82 ரன்னில் அசலங்காவிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும் எதிர்முனையில் விளையாடி வந்த நஜ்மல் உசேன் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் 90 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவர்கள் கூட்டணியில் 169 ரன்கள் சேர்க்கப்பட்டது.  அடுத்து களம் கண்ட மஹ்மூதுல்லா, முஷாப்குர் ரஹீம் வந்த வேகத்தில் ஓரளவு ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்படி மஹ்மூதுல்லா 22, முஷாப்குர் ரஹீம் 10 ரன்கள் சேர்த்தனர்  இறுதியாக பங்களாதேஷ் அணி 41.1 ஓவரில் 7 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டையும்,  ஏஞ்சல் மேத்யூஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

Published by
murugan

Recent Posts

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

16 minutes ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

2 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

3 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

3 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

4 hours ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

6 hours ago