சாம்பியனின் மனநிலையில் விளையாடுகிறோம் ..! போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் கூறியது இதுதான் !!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார்.

நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரி வர விளையாடாததால் அணி பேட்டிங்கில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. இதன் விளைவால் 17.3 ஓவருக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியில் பந்து வீசிய அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனை தொடர்ந்து எளிய இலக்கான 90 ரன்களை எடுப்பதற்கு டெல்லி அணி களமிறங்கியது. இந்த எளிய ஸ்கோரை எளிதில் எடுக்க வேண்டும் என்று டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. இதனால் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து 6 வ்க்ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த் போட்டியில் 11 பந்துக்கு 16 ரன்கள் மட்டும் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங்க் செய்ததன் அடிப்படியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும் போட்டிக்கு பின் வெற்றியின் காரணங்களை குறித்தும் பேசி இருந்தார். அவர் பேசுகையில், ” இன்று நான் மகிழ்ச்சி அடைய நிறைய சம்பவங்கள் இருக்கிறது. நாங்கள் ஒரு சாம்பியனின் மனநிலை எப்படி இருக்குமோ அதை போல ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்தி வருகிறோம், அதே போல எங்கள் அணியினரும் அதை களத்தில் செயல்படுத்துவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்களின் பந்துவீச்சு நிச்சயமாக இதுவரை இல்லாத போட்டிகளில் ஒரு சிறந்த  ஒன்றாகும். இது இன்னும் போட்டியின் வெற்றி சதவீதத்தை கூட்டியது. இப்பொது எனது முக்கிய பொறுப்பு என்னவென்றால் மறுவாழ்வில் இருந்து திரும்பி வந்துவிட்டேன் அதே நேரம் முன்பை விட சிறப்பாக இப்பொது விளையாட வேண்டும் என்பது தான். இந்த போட்டியில் இலக்கு சிறியது என்பதால் இதற்கு முன் தோல்விகளால் குறைந்து உள்ள ரன்ரேட்டை உயர்த்துவதை பற்றி விவாதித்தோம். அதே போல அதை செயல்படுத்தியும் காட்டினோம்.

மேலும், அகமதாபாத்தில் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். இந்த மைதானம் மற்றும் இங்குள்ள சூழ்நிலைகள் அற்புதமாக இருக்கிறது. இந்த சூழலில் அதிக விளையாட்டுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது போன்ற போட்டிகளில் நிறைய கற்றுக்கொண்டு அதை மேம்படுத்த விரும்புகிறோம்.”, என்று போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

4 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

5 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

5 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

6 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

6 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

13 hours ago