CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 17.1-வது ஓவரிலேயே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து, தொடரில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.
சென்னை அணி சார்பாக அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மத்ரே 43 ரன்களையும், டெவால்ட் பிரெவிஸ் 42 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணிக்காக ஆகாஷ் மற்றும் யுத்வீர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவன் கான்வே 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். உர்வில் தனது கணக்கைத் திறக்காமலேயே வெளியேறினார்.
ஆயுஷ் மத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அஸ்வின் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார், ஜடேஜா ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. டெவால்ட் பிரெவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிவம் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
188 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் வலுவான தொடக்கத்தை அளித்தார். ஆனால் நான்காவது ஓவரில் அவர் பெவிலியன் திரும்பினார். யஷஸ்வி 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மேலும், சிறந்த ஃபார்மில் இருந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 27 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். துருவ் ஜூரெல் 12 பந்துகளில் 31 ரன்களுடனும், ஷிம்ரான் ஹெட்மியர் 5 பந்துகளில் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரியான் பராக் 3 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்ஷுல் கம் போஜ், நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில், 17.1-வது ஓவரிலேயே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
இத்துடன், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியின் ஐபிஎல் தொடரின் போட்டிய முடிவுக்கு வந்தது. இது அவர்களது கடைசிப் போட்டியாகும். அதே நேரத்தில், சென்னை அணி தனது கடைசி போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மே 25 அன்று விளையாட உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.