நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் விளையாடியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.
பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசி விராட் கோலி “மத்தியில் களமிறங்கிய தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.மத்தியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைய போட்டியில் தனது ஆட்டத்தை விளையாடினர்.
மேலும் தோனி ஒரு போட்டியில் மோசமாக விளையாடியதால் அனைவரும் அவரை தவறாக பேச தொடங்கிவிட்டனர்.ஆனால் நாங்கள் எப்போதும் தோனிக்கு ஆதரவாக தான் இருப்போம். பல போட்டிகளில் தோனியால் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.தோனியின் அனுபவம் 10-ல் 8 முறை நல்லதாகவே அமைந்து உள்ளது.தோனி எப்போதும் எங்களுக்கு ஆலோசனை வழங்கி வருவார் என கோலி கூறினார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…