கிரிக்கெட் மைதானத்தில் காயங்களுடன் உயிரிழந்த வீரர்கள் யார் என்று தெரியுமா..!

Default Image

கிரிக்கெட் விளையாடும்போது காயமடைந்து இறந்த வீரர்களின் பட்டியல் இங்கே:

1.பிலிப் ஹியூஸ்  (ஆஸ்திரேலியா, 25) – 2014

தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) ஒரு பவுன்சர் பந்தால் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் மூளையில் பெரும் இரத்தப்போக்கு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, ஹியூஸ் சிட்னி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு அறுவை  சிகிச்சை செய்து கொண்டார். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து ஹியூஸ் உயிரிழந்தார்.

2. டாரின் ராண்டால் (தென்னாப்பிரிக்கா, 32) – 2013

 

தென்னாப்பிரிக்க உள்நாட்டு போட்டியில் புல் ஷாட் அடிக்க முயன்றபோது ராண்டால் தலையில் அடிபட்டது. பின்னர், மைதானத்திலே ராண்டால் சரிந்து விழுந்தார். பின்னர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்தார்.

3.சுல்பிகர் பட்டி (பாகிஸ்தான், 22) – 2013

உள்நாட்டு ஆட்டத்தின் போது சுல்பிகர் பட்டி பேட்டிங் செய்யும் போது எதிரணி வீரர் வீசிய பந்தால் மார்பில் அடிபட்டு தரையில் விழுந்தார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

4. ரிச்சர்ட் பியூமண்ட் (இங்கிலாந்து, 33) – 2012

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது மைதானத்தில் பியூமண்ட் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

5.அல்க்வின் ஜென்கின்ஸ் (இங்கிலாந்து, 72) – 2009

 

கிரிக்கெட் நடுவரான அல்க்வின் ஜென்கின்ஸ் ஒரு லீக் போட்டியில் பீல்டர் ஒருவர்  வீசிய பந்து அல்க்வின் தலையில் பட்டது. அது தற்செயலாக நடந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

6.வாசிம் ராஜா (பாகிஸ்தான், 54) – 2006

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் ராஜா இங்கிலாந்தின் வைகோம்பில் சர்ரே அணிக்காக விளையாடும்போது மாரடைப்பால் இறந்தார்.

7.ராமன் லம்பா (இந்தியா, 38) – 1998

இந்தியாவின் முன்னாள் சர்வதேச வீரரான லம்பா, டாக்காவில் நடந்த கிளப் போட்டியின் போது பீல்டிங் செய்யும் போது தலையில் அடிப்பட்டார். அவர் உயிரிழப்பதற்க மூன்று நாட்களுக்குப் முன் கோமா நிலைக்குச் சென்றார்.

8.இயன் ஃபோலி (இங்கிலாந்து, 30) – 1993

உள்நாட்டு போட்டியில் பேட் செய்யும் போது ஃபோலி தற்செயலாக கண்ணுக்கு கீழே பந்தால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

9.வில்ப் ஸ்லாக் (இங்கிலாந்து, 34) – 1989

காம்பியாவின் பஞ்சூலில் நடந்த உள்நாட்டு போட்டியின் போது ஸ்லாக் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். ஆனால் பரிசோதனைகளை மேற்கொண்ட போதிலும், அவரது மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

10.அப்துல் அஜீஸ் (பாகிஸ்தான், 18) – 1959

கராச்சியில் நடந்த உள்நாட்டு போட்டியில் பேட்டிங் செய்யும் போது அஜீஸ் மார்பில் அடிபட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது  உயிரிழந்தார்.

11.ஆண்டி டுகாட் (இங்கிலாந்து, 56) – 1942

லார்ட்ஸில் நடந்த ஒரு போட்டியின் போது டுகாட் மாரடைப்பால் உயிரிழந்தார்.

12.ஜார்ஜ் சம்மர்ஸ் (இங்கிலாந்து, 25) – 1870

லார்ட்ஸில் எம்.சி.சி.க்கு எதிராக நாட்டிங்ஹாம்ஷையருக்காக பேட்டிங் செய்யும் போது சம்மர்ஸ் தலையில் அடிப்பட்டது. அவர் தனது காயத்திற்கு சிகிச்சையளிக்கவில்லை.பின்னர், நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்