Virat Kohli WTC23 [Image- BCCI]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்று விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குவதை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக இரு அணி வீரர்களும் ஐபிஎல் தொடர் முடிந்து நேரடியாக டெஸ்ட் போட்டியில் அதுவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதால் கூடுதல் சவாலாக இருக்கும்.
2021-23 காலகட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சொந்த நாடு(Home) மற்றும் வெளிநாடுகளிலும்(Away) டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருக்கின்றன. ஆனால் இந்த டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் பொதுவான ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் ஜூன் மாதம் முதன்முறையாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ஆடுகளத்தின் தன்மை புதிதாக(Fresh Pitch) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வீரர் விராட் கோலி போட்டிக்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-க்கான இறுதிப்போட்டி நாளை தொடங்குகிறது. ஓவல் மைதானம் பேட்ஸ்மன்களுக்கு இம்முறை சவாலாக இருக்கும் என்று உணர்கிறேன், அதனால் கொஞ்சம் கவனத்துடன் சில யுக்திகளுடன்(Technique) விளையாடினால் சாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ஓவல் மைதானம் சவாலானது தான், மைதானத்தின் தன்மை எப்படி இருந்தாலும் அது பேட்ஸ்மான்களுக்கு சாதகமாகவோ அல்லது வேகம் மற்றும் பந்துவீசுக்கு சாதகமாக இருந்தாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமை மட்டுமே இது மாதிரியான களத்தில் கைகொடுக்கும். களத்தில் இறங்கும் முன்பாக மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப உங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் விளையாட வேண்டும்.
மைதானத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு சரிசெய்து விளையாடினால் தான் உங்களால் களத்தில் ஆட்டமிழக்காமல் ரன்கள் குவிக்க முடியும். மேலும் போட்டி இரு அணிகளுக்கும் பொதுவான மைதானத்தில் நடைபெறுவதால், களத்தின் தன்மையை எந்த அணி சரியாக புரிந்துகொண்டு மாற்றிக்கொண்டு விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி, அதுவே டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கோலி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…