LSGvsCSK [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது.
நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது.
கடந்த மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று வரும் சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவி வரும் லக்னோ அணியும் இந்த போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். சென்னை அணியில் பெரிதாக ஒரு மாற்றமும் செய்யமாட்டார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், அதே லக்னோ அணியில் மாற்றமாக மாயங்க் யாதவ் இடம்பெறுவரா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே 3போட்டிகள் நடைபெற்று உள்ளது. அந்த 3 போட்டிகளில் சென்னை அணி 1 போட்டியிலும், லக்னோ அணி 1போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மீதம் உள்ள 1 போட்டி முடிவு இல்லாமல் இருக்கிறது. இதன் படி பார்த்தால் இந்த போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி வீரர்கள்:
குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…