இன்றைய போட்டியில் இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா..? இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா..?

இந்தியா, இலங்கை இடையில் 3-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் இன்று நடைபெறுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இன்று நடைபெறும் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா..? அல்லது இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.