கண்டிப்பா முடியும்…உலககோப்பையோடு வாங்க! இந்தியாவுக்கு கே.எல்.ராகுல் வாழ்த்து!

Published by
பால முருகன்

கே.எல்.ராகுல் : டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இந்திய அணியை பற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் ” இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது. நான் இதனை ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாமல் இப்போது ஒரு பார்வையாளராகவும், இந்திய கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவராகவும், இதைச் சொல்வேன்.

இந்திய வீரர்கள் கோப்பையை வெல்வதற்கு கடினமான முயற்சிகளை எடுத்து அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். எப்போதுமே நமக்கு ஒரு இலக்காக இருப்பது என்றால் நம்மளுடைய இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்பது தான். இவ்வளவு காலமும் நம்மால் அதைச் செய்ய முடியாமல் போனது துரதிர்ஷ்டம், சற்று ஒரு பக்கம் வேதனையாக தான் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், நம்மளுடைய அணி அதற்கான முயற்சிகளை என்றும் கைவிட்டது இல்லை.

இந்த சீசனில் கடினமான போட்டிகளில் எல்லாம் வென்று வருகிறார்கள். இது நம்மளுடைய கோப்பையை வெல்லும் இலக்குக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பும்ரா போல ஒரு பந்துவீச்சாளர் நம்மளுடைய அணியில் இருப்பது மிகவும் நல்ல விஷயம். நமது அணியின் வெற்றிக்கு அவர் எந்த அளவுக்கு ஒரு முக்கியமான நபராக இருக்கிறார் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. நாளுக்கு நாள் அவருடைய பந்துவீச்சின் தாக்கம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

கடைசியாக கடந்த நவம்பர் மாதம் கோப்பையை வறவிட்டோம், இது எங்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையாக இருந்தது, ஆனால் அந்த அனுபவத்தில் சிலவற்றையும்,வலிகளையும் சில விஷயங்களை கற்றுக்கொண்டோம் என்று  நம்புகிறேன். எனவே, அதெல்லாம் மனதில் வைத்து கொண்டு இந்த சீசன் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பை உடன் வாருங்கள். கண்டிப்பாக கோப்பையை வெல்ல முடியும்” எனவும் கே.எல்.ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் பெயர் அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

22 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago