மனைவி , மகளுடன் நடனமாடி அசத்தும் தோனி .! வைரல் வீடியோ உள்ளே.!

Default Image

தல தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் அன்பு மகள் ஷிவாவுடன் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி , கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அதனை தொடர்ந்து சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்தினார் தல தோனி .

ஆனால் சென்னை அணி லீக் சுற்றில் வெளியேறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது . கடைசியாக தோனியை ஐபிஎல் தொடரில் தான் நேரடியாக பார்க்க முடிந்தது .இனி தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியை அடுத்த ஐபிஎல் தொடரில் தான் பார்க்க முடியும் என்றிருந்த ரசிகர்களுக்கு குடும்பத்துடன் நடனமாடும் வீடியோ மூலம் சந்தோஷத்தை கொடுத்துள்ளார்.

ஏதோ ஒரு சுப நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தில் கோட் சூட்டில் உள்ள தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் அன்பு மகள் ஷிவாவுடன் நடனமாடுகிறார்.தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் செம வைரலாகி வருகிறது .பிஸியாக இருந்தாலும் எப்போதும் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆளாக திகழ்ந்து மற்றுள்ளவருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் தோனி .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்