ஹரியானாவில் ட்ராக்டரில் லாரி மோதியதில் ஒரு விவசாயி பலி! இருவர் காயம்!

ஹரியானாவில், அதிகாலை வேகமாக வந்த லாரி, டிராக் – தள்ளுவண்டியில் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
ஹரியானாவில் உள்ள பிவாணியின் முந்தால் கிராமத்தில், அதிகாலை வேகமாக வந்த லாரி, டிராக் – தள்ளுவண்டியில் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மான்சா மாவட்டத்தை சேர்ந்த தன்னா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து வந்த போது அதிகாலை 5:30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் மூண்டால் அருகே வந்தபோது, வேகமாக வந்த லாரி அவர்களின் டிராக்டர் தள்ளு வண்டியை தாக்கியதாகவும், ஒரு விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர் உடலை போலீசாரிடம் ஒப்படைக்க விவசாயிகள் மறுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025