விபத்தில் சிக்கிய தனது தீவிர ரசிகரை வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிய ஹர்திக் ..!

Published by
murugan

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது  கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே மாறிவிட்டது இப்போது உள்ள இளைஞர்கள் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடுவது போல பார்த்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும்  சிலர் இருந்து வருகின்றனர்.

அதில் சச்சினுக்கு சுதிர் கவுதம் , தோனிக்கு சரவணன் ஹாரி போல  தற்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முகுந்தன் என்பவர் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.

கோயம்புத்தூரை சேர்ந்த முகுந்தன் ஹர்திக் பாண்டியா பெயரை 16 மொழிகளில் தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். ஹர்திக் பண்டியா மோசமாக விளையாடும் நேரத்திலும் அவருக்கு ஆதரவாக முகுந்தன் இருந்துள்ளார். மேலும் ஹர்திக் பண்டியாவை போல தனது முடியை வெட்டிக் கொள்வது போன்ற செயல்களை முகுந்தன் செய்து வந்துள்ளார்.

அதிலும்  ஹர்திக் பாண்டியா இந்தியாவில் எங்கு  விளையாடினாலும் அவரின் ஆட்டத்தை பார்க்க சென்றுவிடுவார் முகுந்தன். இந்நிலையில்  தர்மசாலாவில் இந்தியா , தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையே முதல் டி20 போட்டி நடைபெற இருந்தது. இப்போட்டியை காண முகுந்தன் சென்று உள்ளார்.

ஆனால் மழை காரணமாக போட்டி ரத்தானது.அப்போது முகுந்தன் ஜபல்பூரில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து முகுந்தனை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முகுந்தனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தி ஹர்திக் பாண்டியாவிற்கு சென்று உள்ளது. இதை அறிந்த ஹர்திக் பாண்டியா முகுந்தனின் அறுவை சிகிச்சையின் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு அறுவை பின் செப்டம்பர் 21-ம் தேதி முகுந்தன் வீடு திரும்பினார்.

Published by
murugan

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

26 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

54 minutes ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 hour ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

2 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago