IND vs SA: அவசரமாக மும்பை திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் விலகல்..?

Published by
murugan

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.  தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து விராட் கோலி திடீரென மும்பை திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை திரும்பிய விராட்: 

விராட்கோலி  தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை எனவும்  விராட் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக அவசரமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்துள்ளதாக  கூறப்படுகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கோலி தென்னாப்பிரிக்கா   திரும்புவார் என்றும் அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று மும்பை சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.  கோலி டெஸ்ட் தொடருக்கு திரும்பவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் அடியாக அமையும் என கூறப்படுகிறது.

ருதுராஜ் விரலில் காயம்:

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்த அவர், அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என கூறி 3-வது ஒருநாள் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை, அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறியிருந்தது. இதற்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்  முன் ருதுராஜ் குணமடைய வாய்ப்பில்லை எனவும் இதனால் பிசிசிஐயுடன் பேசி அவரை உடனடியாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டம்:

பயிற்சி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

 

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago