இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததது.
இந்நிலையில் இலங்கை அணி 2-வது நாள் பேட்டிங் செய்துகொண்டு இருக்கும்போது மழை பெய்ததால் 2-ம் நாள் முடிவில் இலங்கை 6 விக்கெட்டை இழந்து 263 ரன்கள்எடுத்தனர். இதை தொடர்ந்து 3-ம் நாள் ஆட்டமும் வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது. 2-ம் நாள் இரவில் பெய்த பலத்த கன மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது.
இதனால் 3-ம் நாள் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய 5.2 ஓவர்கள் மட்டுமே விளையாடினர்.பின்னர் மேகம் கருப்பாக காணப்பட்டதால் விளையாட போதிய வெளிச்சம் இல்லாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 282 ரன்கள்எடுத்து இருந்தனர். களத்தில் தனஞ்ஜெயா டி சில்வா 87 , தில்ருவான் பெரேரா 6 ரன்களுடனும் விக்கெட்டை இழக்காமல் இருந்தனர்.இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. ஆனால் அங்கு பெய்துவரும் தொடர் மழையால் இன்றைய போட்டியும் நிறுத்தப்பட்டது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…