கடந்த திங்கள்கிழமை லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தின் மேற்பரப்பை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.அதை பூரன் ஒப்புக் கொண்டார். ஐசிசி நடத்தை விதிகளின் 3 ஆம் நிலையை மீறியுள்ளார்.
இந்நிலையில் பூரன் அடுத்த நான்கு டி 20 ஐ போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது சாதனையில் இருந்து ஐந்து புள்ளிகள் குறைக்கப்பட்டு உள்ளது.
தடைக்கு பின்னர் பேசிய பூரன், ரசிகர்கள், அணி வீரர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் மன்னிப்புக்கேட்டு உள்ளார்.எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களை மீண்டும் செய்யமாட்டேன் என அவர் உறுதியளித்தார்.
இதனால் நிக்கோலஸ் பூரன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி 20 ஐ போட்டிகளிலும் , டிசம்பரில் நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 ஐ போட்டிவரை விளையாட முடியாது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…