இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆசியக் கோப்பை மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3.,ஆம் தேதி முதல் மலேசியாவில் இந்தியா, வங்க தேசம், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, 73 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டியது. கேப்டன் […]
ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான தொடரை ஆப்கன் அணி 3-0 என வங்க புலிகளை வைட்வாஷ் செய்தது. இதனால் ஆப்கன் அணி 4 புள்ளிகள் அதிகமாக பெற்று, தற்போது 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் இலங்கையும், 10வது இடத்தில் வங்கதேசமும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது. பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் இருந்து டாப்-10ல் ஒரே […]
இந்திய கிரிக்கெட் வீரரான லோகேஷ் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தாடியை காப்பீடு செய்துள்ளதாக கூறி, தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் விராட்கோலியின் தாடியை இருவர் அளவெடுப்பது போன்றும் பின்னர் கோப்புகளில் விராட் கோலி கையெழுத்திடுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. Haha, I knew you were obsessed with your beard @imVkohli but this news of you getting […]
50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்து – நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்ஸ், வாட்கின் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். வாட்கின் 59 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பேட்ஸ் உடன் எம்எல் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அயர்லாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை […]
ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. டேராடுனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ,இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தாங்கள் வாய்மூடி அமைதியாக இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 13ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்காக ஆஸ்திரேலிய அணியினர் வாய்மூடி அமைதியாக இருக்க […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வந்துள்ள நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் வங்காளதேசம் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது.டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. இங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு […]
இந்திய அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்த அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்று சச்சின் […]
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது. அவ்வப்போது விராட் கோலி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிடுவார்.இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் கார்டியோ உடற்பயிற்சியை தாம் செய்து முடித்த பின்னரும் கூட, மனைவி அனுஷ்கா சர்மா அதிகமாகச் செய்வதாக விராட் கோலி பாராட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்குமே தவிர, முகத்திலும், எதிரணியை ஆத்திரப்படுத்தும் பேச்சு இருக்காது. ஆனால், ஒரு சம்பவத்தில் ரோகித் சர்மாவே […]
பெண் எழுத்தாளர் ரெஹம்கான் எழுதிய புத்தகத்திற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ரெஹம் கானின் புத்தகம் ஆபாசமானது என்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அப்பகுதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இம்ரான்கான், குடும்ப உறவுகளின் தன்மையை அப்புத்தகம் சிதைப்பதாகவும், நவாஸ் ஷெரீப்பின் தூண்டுதலால்தான் ரெஹம்கான் இதை எழுதியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 12 மாதங்களில் விளையாட்டு வீரர்கள் பெற்ற ஊதியத்தை கணக்கில் கொண்டு 2018ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியல் தயாராகி உள்ளது. 100 இடங்களுக்கான இந்தப் பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான ஃபிலாய்டு மேவெதர் ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் விராட் கோலி 160 கோடி ரூபாய் வருமானத்துடன் 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். […]
ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா,2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார் . இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான […]