இந்தியாவில் சதம் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் இணைந்த குவின்டன் டி காக்..!

இந்தியா , தென்ஆப்பிரிக்கா அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் 176 , அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.
இதை தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. இந்நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் குவித்தனர்.
இதில் அதிகபட்சமாக எல்கர் 160 , குவின்டன் டி காக் 111 ரன்கள் அடித்தார் அதில் 16 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும் .இதன் மூலம் இந்தியாவில் டெஸ்ட் போட்டிக்கு சுற்று பயணம் செய்து சதம் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் குவின்டன் டி காக் இணைந்து உள்ளார். அந்த பட்டியலில் குவின்டன் டி காக் 13 வது இடத்தில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025