இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் 21 , மயங்க் அகர்வால் 14 ரன்களுடன் வெளியேறினர். பின்னர் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர்.
களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் இருந்தனர்.இன்று இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.நிதானமாக விளையாடி வந்த ரஹானே அரைசதம் அடித்தார். அரைசதம் அடுத்த சில நிமிடங்களில் ரஹானே 51 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பிறகு ஜடேஜா களமிறங்க சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி சதம் விளாசினார்.
ஜடேஜா 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தி வந்த கோலி 136 ரன்கள் இருக்கும்போது விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்திய அணியின் கேப்டன் கோலி டிக்ளர் செய்தார்.பங்களாதேஷ் அணியில் எபாதத் ,அல்-அமீன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…