சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: 2-வது சுற்றில் களமிறங்கும் முன்னணி இந்திய வீரர்கள்..!

இன்று நடைபெறும் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி.சிந்து டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கெயர்ஸ்ஃபெல்ட்டை 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் 21-16, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் மேட்ஸ் கிறிஸ்டோபர்சனையும், சாய்னா நேவால் 21-8, 21-13 என்ற செட் கணக்கில் பிரான்சின் யெல்லே ஹோயாக்சையும் தோற்கடித்தனர்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி இந்திய வீரர்கள் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றில் களமிறங்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025