FIde Chess [file image]
Fide Chess : இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியானது கனடாவில் உள்ள டொராண்டோ மாகாணத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடினர். அதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் அடங்குவர். இதில் இடம்பெற்று விளையாடும் 16 வீரர்களும் அவர்களுக்குள் தலா 2 முறை மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அந்த வீரர், உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரினுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த தொடரில் நேற்றைய நாளின் 13-வது சுற்றின் முடிவில் ஏற்கனவே 8.5 புள்ளிகளுடன் குகேஷ் முதலிடத்தில் இருந்தார். அதே நேரம் நெப்போம்நியாச்சி, நகமுரா மற்றும் பாபியானோ கருனா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில இருந்தனர். இந்நிலையில், இன்றைய நாளில் கடைசி சுற்றான 14-அவது சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், அமெரிக்க க்ராண்ட்மாஸ்டரான ஹிகாரு நகமுராவை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்தால் கேண்டிடேட்ஸ் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய வாழ்வா சாவா தருணத்தில் நகமுராவுடன் மோதினார். ஆனால், அந்த போட்டியை மிகச்சிறப்பாக விளையாடி போட்டியை ட்ரா செய்தார். இதனால் 8.5 புள்ளியில் இருந்த அவர் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வந்தார். அதே நேரம் மறுபுறத்தில் நெபோம்நியாச்சியும், கருனாவும் விளையாடினார்கள். நடைபெற்ற இந்த போட்டி ட்ரா ஆனதால் இருவரும் 8.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தனர்.
இதனால் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் இளம் க்ராண்ட்மாஸ்டரான குகேஷ் இந்த ஃபிடே செஸ் தொடரை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், உலக செஸ் சாம்பியனான சீனாவின் புகழ் பெற்ற க்ராண்ட்மாஸ்டரான டிங் லிரினுடன் எதிர்க்கொள்ளவும் தயாராக உள்ளார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற 17 வயது இளம் வீரர் என்ற பெருமையை வென்றார் தமிழக வீரரான குகேஷ் .
விஸ்வநாத் ஆனந்திற்கு அடுத்த படியாக, 2-வது இளம் இந்திய வீரராக உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் பெருமையை பெற்றுள்ளார் குகேஷ். மேலும், ஃபிடே சாம்பியன்ஷிப் வென்ற தமிழக வீரர் குகேஷ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ்க்கு X தளத்தில் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…