துபாய் கோல்டன் விசாவானது இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு துபாய் கோல்டன் விசா அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இந்த விசா காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சானியா மற்றும் அவரது கணவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் 10 ஆண்டுகள் வசிக்க முடியும்.
பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்குப் பிறகு, இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியர் சானியா ஆவார்.
இதுகுறித்து சானியா கூறியதாவது: “துபாய் கோல்டன் விசாவை எங்களுக்கு வழங்கியதற்காக துபாயின் அடையாளம், குடியுரிமை மற்றும் விளையாட்டு பொது அதிகாரத்திற்கான கூட்டாட்சி ஆணையம் ஷேக் முகமது பின்ரஷீத் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். துபாய் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானது.
ஏனெனில்,இது எனது இரண்டாவது வீடு, நாங்கள் இங்கு அதிக நேரம் செலவிட எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடிமக்களில் ஒருவராக இருப்பதால், இது எங்களுக்கு ஒரு முழுமையான மரியாதை அளிக்கிறது.மேலும்,இது அடுத்த இரண்டு மாதங்களில் திறக்கவுள்ள எங்கள் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்”,என்று கூறினார்.
துபாய்க்கு டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சியை வழங்கும் தங்கள் விளையாட்டு அகாடமியை விரைவில் கொண்டுவருவதற்கான முயற்சியில் சானியா மற்றும் ஷோயிப் ஆகியோர் உள்ளனர்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.அதில் மகளிர் இரட்டையர் போட்டியில் அங்கிதா ரெய்னாவுடன் அவர் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…