இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்.! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாராட்டு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  1. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று, டி-20 போட்டி தொடரை கைப்பற்றியது.
  2. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டான் இன்சமாம் உல் ஹக் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து, இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் தெரிவித்தார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர், 2 டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. அதில் தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் 2, 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 3-வது போட்டியை  ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டி இறுதியில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. அதனால் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் நடைபெற்றது. இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி 3:0 என்ற தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் அவர் கூறினார். அதில் இந்திய அணியில் இரு பெரிய வீரர்கள் உள்ளனர். ஒருவர் விராட் கோலி, மற்றொருவர் ரோஹித் சர்மா என்றும், இருவருமே பெரிய வீரர்கள். ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இரண்டு வீரர்களை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற முடியாது. அங்கு தான் மேலும் இரு திறமையான வீரர்களை இந்திய அணி கொண்டு வந்துள்ளது. அது கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என கூறியுள்ளார். இந்த வீரர்கள் அணியின் மன உறுதியை வேறு ஒரு உயரமான கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் இந்திய அணியின் பந்துவீச்சை கண்டு பதறுகின்றனர் எதிர் அணியினர். நம்பர் 1 பவுலரான பும்ரா மற்றும் ஷமி இருவருமே வேகமான மற்றும் துல்லிய பந்துவீச்சால் மிரட்டுகிறார்கள் எனவும், சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசுகின்றனர் என தெரிவித்தார். இந்திய அணி வெற்றி அணியாக இருக்க மற்றுமொரு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலியின் செயல் தான் காரணம் என்றும், அவரின் ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிமிக்க செயல்களால், அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட பெரிய ஊக்கமாக இருக்கிறது என இன்சமாம் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

1 hour ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago