டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை சியுங் ந்கன்யியை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து,இஸ்ரேலின் போலிகர்போவை முதல் சுற்றில் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து,முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் வெறும் 28 நிமிடங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதன்படி,இன்று நடைபெற்ற குரூப் ஜே பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையும், 2016 ரியோ வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, ஹாங்காங்கின் சியுங் ந்கன் யினை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் விளையாடி சிந்து ஆதிக்கம் செலுத்தினார்.இதனால்,முதல் செட்டை 21-9 என கைப்பற்றினார்.இரண்டாம் சுற்றில் சற்றே தடுமாறிநாளும்,21-16 என்ற செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்று ஹாங்காங்கின் சியுங் ந்கன் யிக்கு எதிரான போட்டியில் பெண்கள் ஒற்றையர் சுற்றுக்கு 16 வது இடத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…