யு-20 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி.! இந்திய மகளிர் அணி சாம்பியன்..!

ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்ற யு-20 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஜூனியர் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தனர்.
ஆன்டிம் பங்கல் 53 கிலோ பிரிவு உக்ரைனின் மரியா யெஃப்ரெமோவாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தார். ஆன்டிம் பங்கல் தனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம், யு-20 பட்டங்களை வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்
மல்யுத்த வீராங்கனை சவிதாவும் 62 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். 10-0 என்ற கணக்கில் வெனிசுலாவின் ஆஸ்ட்ரிட் பவுலா மான்டெரோ சிரினோஸை வீழ்த்தி தங்கம் வென்றார். இந்திய மகளிர் அணி 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு பெற்றது.
இந்தியா 140 புள்ளிகளுடன் அணி சாம்பியன்ஷிப்பை உறுதி செய்தது. ஜப்பான் (129 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா (118 புள்ளிகள்) 3வது இடத்தையும் பிடித்தன. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த வயது பிரிவிலும் இந்தியா அணி சாம்பியன்ஷிப்பை வெல்வது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.