வைரல் வீடியோ..! ஹிந்தி பாடல் பாடி கலக்கும் தோனி..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பின் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடரிலும் தோனி கலந்து கொள்ளாததால் தோனி இனிமேல் விளையாடுவரா..? விளையாட மாட்டாரா ..? என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி மௌனம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது தோனியின் வருங்கால திட்டம் குறித்த கேள்விக்கு தோனிபதில் அளித்தார்.அதில் ” ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள்” என கூறினார். இதற்கு முன்னதாக தோனி வருங்காலம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி தோனி எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள ஐபிஎல் தொடரை காத்திருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் தோனி பாடல் பாடும் வீடீயோவை பதிவிட்டு உள்ளார். அதில்” மிகவும் திறமையானவர் தோனி. இந்த வீடியோவை இங்கு பதிவு செய்ததற்காக என்னை எதுவும் செய்து விடாதீர்கள்.இது கட்டாயம் பகிரப்பட வேண்டும். சாக்ஷி உங்களது வீடியோ மிக விரைவில்” என பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோவில் தோனி மைக் பிடித்து பழைய இந்தி பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த வீடியோ பார்த்த தோனி ரசிகர்கள் பலர் வீடியோவைப் பதிவிட்ட நபருக்கு நன்றியைத் கூறி வருகின்றனர்.