Rohan Bopanna [Image source : ANI]
சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19வது பதிப்பு ஆனது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 7வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று மதியம் நடைபெற்ற டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி, சீன தைபே நாட்டைச் சேர்ந்த என்-சுவோ, சுங்-ஹாவ் ஜோடி விளையாடியது. இதில் 2-6, 6-3, 10-4 செட்கள் என்ற கணக்கில் புள்ளிகளை எடுத்தனர்.
2 செட்களில் முன்னிலை பெற்ற இந்தியா தைவானை வீழ்த்தி, டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றது. இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் சேர்ந்தது. தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்ற தடகள வீரர் ரோஹன் போபண்ணா செய்தியாளரிடம் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, “மிகவும் பெருமையாக உள்ளது. இந்திய விளையாட்டுகள் வளர்ந்து வருவதாக நான் நினைக்கிறேன். டென்னிஸ் வளர்ந்து வருகிறது. நாங்கள் அனைத்தையும் சமாளித்து விளையாடியதால் டென்னிஸில் தங்கப் பதக்கங்களை வெல்ல முடித்தது. டென்னிஸில் தங்கம் வென்றது ருதுஜாவுக்கும் எனக்கும் ஒரு பெரிய தருணம்.”
“அரசாங்கமும் கூட்டமைப்பும் வழங்கும் சிறிதளவு ஆதரவு இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது. நான் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடப் போவதில்லை,.அதனால் விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் உள்ள சூழலை அனுபவித்து வருகிறேன்.” என்று கூறினார்.
மேலும், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8 வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…