ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார். இதற்கிடையில், புனிதமான ரமலான் பண்டிகை காலத்தில் ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கவும், உயிர் பலிகளை தடுக்கவும், அரசுதரப்பில் 8 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தலிபான் அமைப்பினர் 3 நாட்கள் மட்டும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் […]