சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, பாட்னா, ஜார்காண்ட், திரிபுரா, தெலங்கான உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படும் நியமனமும் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் நடைபெற்றுள்ளது. […]