300 ஆண்டுகள் கழித்து ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில்க்கு கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் அருள்பாலித்து வரும் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மதனாஞ்சேரி கிராமத்தில் 300 ஆண்டு காலமாக மிகத்தொன்மை வாய்ந்த இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊா் மக்கள் முடிவு செய்தனா். அதன்படி புனரமைப்பு பணிக்காக சுமாா் ரூ. 3 கோடி செலவில்பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் […]