கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செயலில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.இதனையடுத்து,இதற்கு கண்டனம் தெரிவித்து,இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி […]